சுவாமி பக்திஸ்வரூப தீர்த்த மஹாராஜ் வட அமெரிக்கப் பயணம்
நவம்பர் 2010 முதல் ஜனவரி 2011 வரை, கௌடிய வைஷ்ணவ சங்கத்தின் (GVA) ஸ்தாபக ஆச்சார்யரான சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹாராஜ் தமது அகில உலக ஆன்மீகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மேரிலாந்து, வாஷிங்டன் டி.சி., மேற்கு வெர்ஜினியா, கனெக்டிகட், நியு ஜெர்சி, ஜார்ஜியா, டெக்சாஸ் மற்றும் கனடாவில் ஒட்டாவா ஆகிய இடங்களுக்கு வருகை தந்து சொற்பொழிவு ஆற்றினார்கள்.

சுவாமிகள் அருளிய 'பகவத் கீதை-எளியவடிவில்' MP3 குறுந்தகடுகள் மேரிலாந்தில் உள்ள மங்கள்மந்திரில் நடந்த தீபாவளி விழாவில் வெளியிடப்பட்டன. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் ஒட்டாவா கார்ல்டன் பல்கலைக்கழகத்திலும் சுவாமிகள் சிறப்புரை ஆற்றினார்கள். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள டேவிஸ் அண்ட் எல்கின்ஸ் கல்லூரியில் 'உலக அமைதி' என்னும் தலைப்பில் நடைபெற்ற அகில உலக மாநாட்டில் சுவாமிகள் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இயற்கைச் சீற்றங்கள், போர் ஆகியவற்றால் உலகம் அமைதியிழந்து தவிக்கும் இந்தக் கால கட்டத்தில் அதற்கான தீர்வுகளை சுவாமிகள் வழங்கினார்.

சிறப்பு அழைப்பின் பேரில் சுவாமிகள், Fistful of Mercy இசைக்குழுவைச் சேர்ந்த தானி ஹாரிசன், ஜோசப் ஆர்தர் மற்றும் பென் ஹார்பர் ஆகியோரை சிக்ஸ்த் & ஐ ஹிஸ்டாரிக் சினகாக் (Sixth & I Historic Synagogue), வாஷிங்டன் டி.சி.யில் நடந்த இசைக்கச்சேரியில் சந்தித்தார்கள். தானி ஹாரிசன் பிரபல பீட்டில்ஸ் (Beattles) இசைக்குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாரிசனின் புதல்வர். இந்நிகழ்ச்சியில் அவர் ஒரு பாடலை சுவாமிகளுக்கு அர்ப்பணம் செய்தார்.

சுவாமிகள் கனெக்டிகட், நியூ ஜெர்சி, ஜார்ஜியா, டெக்சாஸின் பல்வேறு இடங்களில் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதைச் சொற்பொழிவுகள் ஆற்றினார்கள். அட்லாண்டா நகரில் முகுந்த மாலை ஸ்தோத்திரத்தை விரிவாக விளக்கினார். டிசம்பர் 4-ஆம் தேதி அட்லாண்டாவில் ஜான்ஸ் கிரீக் நிறுவனர் தின அணிவகுப்பில் பக்தர்கள் ஹரிநாம சங்கீர்த்தனத்துடன் ரத யாத்திரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாட்டின் வைணவக் குடும்பத்தில் தோன்றிய சுவாமிகள் சிறுவயது முதலே வேத நூல்களைக் கற்றுத்தேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்க்ருதம், பெங்காலி உட்படப் பல மொழிகளில் வல்லுநர் ஆவார். கௌடிய வைஷ்ணவ சங்கம் சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகள் ஒலி/ஒளி தகடுகளாக வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.gva.in. தொலைபேசி: 1-888-9GVA-USA.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com