பிப்ரவரி 2011: ஜோக்ஸ்
முதலாளி: "அந்த ஆளைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளுன்னு அப்பவே சொன்னனே! ஏன் அவன் இன்னும் இங்கே நிக்கறான்?
வேலைக்காரர்: அவரு கழுத்தைதான் இவ்வளவு நேரம் தேடிகிட்டு இருக்கேன், அகப்படலை முதலாளி!

ஹெர்குலஸ் சுந்தரம்,
ஹெர்குலஸ்.

*****


மாலா: எத்தனையோ டாக்டர் கிட்டே என் மாமியாரைக் காண்பிச்சாச்சு. ஒரு பிரயோஜனமும் இல்லை
நீலா: அடப்பாவமே.. அப்படியா?
மாலா: ஆமா, என்னமாவது செஞ்சு அவரைப் பிழைக்க வெச்சுடறாங்களே!

*****


நிருபர்: திருமணத்துக்கு முன்னால ’பேய்களுடன் பேசுவது எப்படி’ன்னு புத்தகம் எழுதினீங்களே! இப்போ என்ன புத்தகம் எழுதிக்கிட்டிருக்கீங்க?
எழுத்தாளர்: ’பேய்களுடன் வாழ்வது எப்படி’ன்னு எழுதிக்கிட்டிருக்கேன்.

*****


மேலதிகாரி: கொலை வழக்கை உங்ககிட்ட ஒப்படச்சோமே, என்ன கண்டுபிடிச்சீங்க?
காவலர்: கொலை செய்யப்பட்ட நபர் சம்பவம் நடக்க 2 நிமிடங்கள் முன்புகூட உயிரோட இருந்திருக்கிறார்.

*****

© TamilOnline.com