பார்த்திபனின் 'பச்சக்குதிர'
நடிகர் பார்த்திபன் நாயகனாக நடிக்க வேகமாக வளர்ந்து வருகிறது 'பச்சக்குதிர'. நடிப்பு, கதை, வசனம், இயக்கம் என்று அனைத்தும் பார்த்திபனே கவனித்துக் கொள்கிறார்.

'பச்சக்குதிர' பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகும் பத்தாவது படம். நாயகி நமீதா. இப்படத்தில் நமீதா குடும்பப் பெண்ணாக வரப் போகிறார்.

படத்தின் முக்கியக் காட்சிகளில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ஜாக்கி சான் தோன்ற இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது.

பாடல்கள், வேறு யார், பார்த்திபனேதான். சபேஷ்-முரளி இசையமைப்பில் உருவாகும் 'பச்சக்குதிர' வேகமாகத் தயாராகி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டிற்கு ரசிகர்கள் 'பச்சக்குதிர' தாண்டலாம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com