'அக்ஷயா' கிருஷ்ணனுக்குப் பாராட்டு
CNN டாப் 10 ஹீரோக்களில் ஒருவரான தமிழர் நாராயணன் கிருஷ்ணனை (பார்க்க: தென்றல், ஜனவரி 2010) காலேஜ்வில்லில் உள்ள திருமதி மஞ்சுளா இப்ரஹிம் இல்லத்தில் சந்தித்தோம். அவர் சி.என்.என். அழைப்பின்படி நவம்பர் 18 அன்று அமெரிக்காவில் வந்திறங்கினாராம். 19ம் தேதி ஒத்திகை முடிந்தபின் மற்ற ஹீரோக்களுடன் அறிமுகம் நடந்தது. அடுத்த நாளே ரெகார்டிங். சி.என்.என். மிக அழகாக ஏற்பாடுகள் செய்திருந்ததைப் பாராட்டினார். அவருடன் அவரது தந்தையாரும், குருவாக மதிக்கும் திரு பார்த்தசாரதியும் வந்திருந்தனர். அவர்கள் மூவரும் அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பென்சில்வேனியா என சென்ற இடங்களிலெல்லாம் தமிழர்களின் வரவேற்பும், ஆதரவும் பாராட்டும் மனதைத் தொட்டதாகக் கூறினார். அக்?ஷயா ட்ரஸ்ட் நிறுவனத்துக்காக 3rd eye Dancer பரதகலா அகாதமி நிதி திரட்டும் நிகழ்ச்சி செய்தளித்தது குறிப்பிடத் தக்கது என்றார். நீங்களும் ஆதரிக்க விரும்பினால் தொடர்புகொள்ள: www.akshayausa.org, www.akshayatrust.org

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com