மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிஃபோர்னியா, மிசிகன் விஜயம்
நவம்பர் 21 முதல் டிசம்பர் 1, 2010 வரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் விஜயம் செய்தார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை, அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

"இறைவனிடம் காட்டும் பக்தி என்பது, அனைத்து உயிரினங்களிடமும் நாம் காட்டும் அன்பாகும். இதில்லாமல், வெறும் பிராத்தனை மட்டும் செய்வது பக்தியல்ல. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவரல்ல. நம் எல்லோருடைய உள்ளத்தின் உள்ளேயும் அவர் வசிக்கிறார். இந்த மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும். அதற்குப் பணிவு மிகவும் அவசியம். இதற்காக நாம் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும் - அது அகம்பாவத் தியாகம். இந்த அகம்பாவமே அனைத்திற்கும் தடையாக இருக்கிறது. இதை துறப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்," என்கிறார் அம்மா.

அம்மா ஆற்றும் பொது நலத்தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com