கணேஷ் வெங்கட்ராமனின் பனித்துளி
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் போன்ற ப்டங்களின் மூலம் தனது வித்தியாசமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய கணேஷ் வெங்கட்ராமன் கதாநாயகனாக நடிக்கும் படம் பனித்துளி. சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் காதல் அனுபவமும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும் தான் படத்தின் கரு. கல்பனா பண்டிட், ஷோபனா என்ற புதுமுகங்கள் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். நட்டி குமார், டாக்டர்.ஜெய் ஆகியோர் படத்தை இயக்குகின்றனர். அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்ஸ் ஆன் ப்ரேம்ஸ் நிறுவனமும், ஹவுஸ் ஆப் பண்டிட்டும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஒளிப்பதிவு : ஹாலிவுட் கேமராமேன் கிரிஷ் எல்ரிட்ஜ். அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com