பரிமளா திரையரங்கம்


வித்தியாசமான பெயர்களைச் சூட்டி எப்படியாவது ரசிகர்களைக் கவர்வது என்பது இப்போது தமிழ் சினிமாவில் வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் உருவாகி வரும் புதிய படம் பரிமளா திரையரங்கம். நடிகர் ஸ்ரீமன் இப்படத்தைத் தயாரிக்கிறார். கிராமப் பகுதிகளில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த டூரிங் டாக்கீஸை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் புதுமுகம் விகாஸ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நந்தி, ரேணிகுண்டா படத்தில் நடித்த சனுஷா ஆகியோர் நடிக்கின்றனர். சிறுவயதில் தான் பார்த்து ரசித்து வளர்ந்த திரையரங்கம் திருமண மண்டபமாக மாறப்போகிறது என்பதை அறிந்ததும், கதாநாயகனே அதை வாங்கி எப்படி வெற்றிரமான திரையரங்கமாக மாற்றுகிறான் என்பதுதான் படத்தின் கதையாம். சரவண ஜீவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இசை: கண்ணன்.

அரவிந்த்

© TamilOnline.com