பலாப்பழ இலையடை (வத்சன்)
தேவையான பொருட்கள்
பலாப்பழ அல்வா - கிண்ணம்
சதுர இலைத் துண்டு - 10
அரிசி மாவு - 1 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
அரிசியை ஊற வைத்து நன்கு கழுவி நைஸாக அரைக்கவும். இலைத் துண்டுகளில் ஈரத் துணியால் துடைக்கவும். மாவில் நெய் கலந்து கரண்டியால் சப்பாத்தி போல பரப்பவும். நாலு பக்கமும் சிறிது இடம் காலியாக விட்டு அல்வாவைச் சிறு பூரணம் போல் உருட்டவும். பிறகு அதைக் கையால் பரத்தி மடிக்கவும். இட்டலித் தட்டில் மடக்கின பாகத்தை வைத்து வேக வைக்கவும். சிறிது ஆறிய பின் இலையில் இருந்து எடுத்துப் பரிமாறவும். வித்தியாசமான, மிக ருசியான ஸ்வீட் இது.

(குறிப்பு: மடக்கின இலை கீழே வரும்படி வைத்தால்தான் மாவு விழாமல் இருக்கும்)

அலமேலு ராமகிருஷ்ணன்,
சான் ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com