பலாப்பழ இனிப்பு பலப்பல!
இங்கே சொல்லியிருக்கும் ஸ்வீட் எல்லாம் கேரளத்து ஸ்பெஷலாக்கும்.

பலாப்பழ அல்வா (சக்க வரட்டி)

தேவையான பொருட்கள்
பலாச்சுளை - 20
ஏலக்காய் - 5
நெய் - 1 கரண்டி
வெல்லம் - 1 கிண்ணம்

செய்முறை
பலாப்பழத்தை கொட்டை, சவ்வு நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் தண்ணீர் விடாமல் வேக வைக்கவும். வாணலியில் வெல்லப் பொடி சேர்த்து நெய், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாத பருவம் வந்ததும் இறக்கவும். தண்ணீர் விடாததால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். சீசனில் இதை நிறையச் செய்து வைத்துக்கொண்டு, தேவைக்கேற்பப் பல வகைகளில் உபயோகிக்கலாம்.

அலமேலு ராமகிருஷ்ணன்,
சான் ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com