சசிகுமாரின் ஈசன்


சுப்பிரமணியபுரம் படத்துக்குப் பின் சசிகுமார் இயக்கும் படம் 'ஈசன்'. சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் ஆகியோர் நடிக்கின்றனர். பிழைப்பு தேடி வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாய் வாழ்பவர்கள் எனச் சென்னை மாநகர வாழ்வின் பிம்பங்கள்தாம் இந்தக் கதை என்கிறார் இயக்குனர். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரி, அழகப்பன் மந்திரி வேடங்களில். ஆக்கலும், அழித்தலும் செய்கிறவன் ஈசன். அது போன்றதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குநர். இசை: ஜேம்ஸ் வசந்தன்

அரவிந்த்

© TamilOnline.com