NETS குழந்தைகள் தின விழா
நவம்பர் 20, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் NETS குழந்தைகள் தின விழாவை நடத்தவுள்ளது. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 'NETS Got Talent' (திறமை வெளிக் கொணரல்), திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் தமிழாக்கம் என மூன்று பகுதிகளாக இந்நிகழ்ச்சி நடைபெறும்.

16 வயதுவரை உள்ளவர்கள் மாறுவேடம், திறமை வெளிக்கொணரல் போட்டிகளில் பங்கேற்கலாம். 5-14 வயது சிறார்கள் பல்நிலை திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்கலாம். இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக 'தமிழாக்கம்' வினாடி-வினா நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. இதில் ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கூறிப் பரிசு வெல்லலாம்.

இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளை நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் அழைக்கிறது.

நாள்: நவம்பர் 20, 2010, சனிக்கிழமை
நேரம்: மதியம் 3:00 மணி
இடம்: Framingham Kaafe Tech. School அரங்கம்
நுழைவுக்கட்டணம்: NETS உறுப்பினர்களுக்கு இலவசம்.
உறுப்பினர் அல்லாதவர்கள்: $5

பூங்கோதை கோவிந்தராஜ்,
ஃப்ரமிங்காம்

© TamilOnline.com