கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
நவம்பர் 13, 2010 அன்று, கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட இசை நிகழ்ச்சி அன்று வின்ட்ஸர் உயர்நிலைப் பள்ளி, வின்ட்ஸர், கனெக்டிகட்டில் நடைபெற உள்ளது. முழு இசைக்கருவிக் குழுவுடன், அமெரிக்க்காவின் முன்னணிப் பாடகர்களைக் கொண்ட ஷக்தி குழுவினரின் 'நினைத்தாலே இனிக்கும் 2010' என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சி மதியம் 2 மணிக்குத் தொடங்கும். முதலில் கலந்துரையாடல் இடம்பெறும். பின்னர் இசை நிகழ்ச்சி 3 மணிமுதல் நடைபெறும். இரவு உணவுடன் நிறைவு பெறும். சென்னையில் உள்ள 'சிறகு' ஆதரவற்றோர் பள்ளிக்கு இந்த நிகழ்ச்சியில் திரட்டும் நிதி வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு: www.cttamilsangam.org

உமா சேகர்,
கனெக்டிகட்

© TamilOnline.com