வேட்டை


நான் கடவுள், மதராசப்பட்டினம் போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பைக் காட்டியவர் ஆர்யா. தற்போது அவர் தயாநிதி அழகிரி தயாரிக்கும் 'வேட்டை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை யுகபாரதியும், நா. முத்துக்குமாரும் எழுதுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசை. ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம் இது என்கிறார் லிங்குசாமி. கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com