நாங்க


1985-ம் ஆண்டு காலக்கட்டத்தை பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது 'நாங்க'. புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. செல்வா இயக்குகிறார். அவருக்கு இது 25வது படம். கல்லூரியின் காதல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ஐந்து விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டு, பின்னர் அவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் கல்லூரி வாழ்க்கையின் புதிய பரிணாமத்தைச் சொல்லும்" என்கிறார் செல்வா. இசை: பாலபாரதி.

அரவிந்த்

© TamilOnline.com