கார்த்தியின் சிறுத்தை


பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் சிறுத்தை. கதாநாயகி தமன்னா. இவர்களுடன் சந்தானம் உட்படப் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை, தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா இயக்குகிறார். பாடல்களை அறிவுமதி, நா. முத்துக்குமார், விவேகா எழுத, இசையமைக்கிறார் வித்யா சாகர். முதன்முறையாக கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது போனஸ்.

அரவிந்த்

© TamilOnline.com