ஸ்வர்ணலதா
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உட்பட பலரது இசையமைப்பில் பாடிச் சிறப்பிடம் பெற்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது உட்பட பல மொழிகளில் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. மாலையில் யாரோ மனதோடு பேச, எவனோ ஒருவன் வாசிக்கிறான், போவோமா ஊர்கோலம், உளுந்து வெதைக்கையிலே, என்னுள்ளே என்னுள்ளே போன்ற மென்மையான பாடல்களையும், ஆட்டமா தேரோட்டமா, ராக்கம்மா கையத் தட்டு, முக்காலா முக்காபலா, மாயா மச்சீந்திரா, காதல் யோகி போன்ற அதிரடிப் பாடல்களையும் பாடியவர். தமிழ்த் திரையிசையில் ஸ்வர்ணலதாவுக்கு தனித்த ஓர் இடம் உண்டு.



© TamilOnline.com