ஹன்ட்ஸ்வில்லில் சேலம் ஸ்ரீராம் கச்சேரி
செப்டம்பர் 18, 2010 அன்று அலபாமாவின் ஹன்ட்ஸ்வில் நகரத்தில் சேலம் ஸ்ரீராம் அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரியை Huntsville Indian Cultural Performing Arts (HICPA) வழங்குகிறது. இது மதியம் 3:00 மணிக்கு Hindu Cultural Center of Narth Alabama (HCCNA) அரங்கத்தில் நடைபெற உள்ளது. திரு. பிரசாத் மந்திரரத்தினம் வயலினும், திரு. ராஜப்பா ஏகாம்பரம் மிருதங்கமும் வாசிக்க உள்ளனர்.

HICAP தன்னார்வத் தொண்டர்களால், பாரம்பரியத் தென்னிந்தியக் கலைகளான கர்நாடக சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். மேலும் விபரங்களுக்கு, Dr. Chiyyarath அவர்களை 256.216.2166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்கள் நன்கொடையாக $10 கொடுத்துக் கச்சேரியை ரசிக்கலாம்.

பிருந்தா ஐயர்,
ஹன்ட்ஸ்வில், அலபாமா

© TamilOnline.com