மங்காத்தா


அஜீத் நடிக்கும் ஐம்பதாவது படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கம். கதாநாயகியாக நீது சந்திரா நடிக்கிறார். அஜீத்துடன் நாகார்ஜுனா இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் மனோஜ், பிரேம்ஜி அமர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். நகைச்சுவை கலந்த அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறது கோடம்பாக்கப் பட்சி. மங்காத்தாவின் எண்பது சதவீதக் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன என்பது கொசுறு தகவல். கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இசை: யுவன்ஷங்கர்ராஜா.

அரவிந்த்

© TamilOnline.com