முரண்


தனது ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சேரன் தயாரிக்கும் படம் ’முரண்’. இதில் சேரனுடன் பிரசன்னா இணைந்து நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடமேற்கிறார். புதுமுக நாயகிகள் நடிக்க இருக்கின்றனராம். மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் ராஜன் மாதவ் படத்தை இயக்குகிறார். இவர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். ராஜனின் சகோதரர் சஜன் மாதவ்தான் படத்திற்கு இசை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள், ஒருவரையொருவர் சந்திக்கும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அதையொட்டிய சம்பவங்களும்தான் படத்தின் கதை. அஞ்சாதே படத்தைப் போல இதிலும் பிரசன்னாவுக்கு முக்கியமான வேடம் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com