3 இடியட்ஸ்


ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 3 இடியட்ஸ். தற்போது இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்குகிறார். விஜய், மாதவன், ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. தெலுங்கில் விஜய்க்குப் பதிலாக நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார். தற்போது எந்திரன் பட வெளியீட்டில் பிஸியாக இருக்கும் ஷங்கர், அப்படம் வெளியானதும் இதைத் தொடங்குவாராம். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் படம் இது. இப்படத்திற்கு ’ராஸ்கல்’ என்று தற்போது பெயர் சூட்டியுள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com