சங்கரன் கோவில்


தமிழ்நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் சங்கரன் கோவில். இதில், கதாநாயகனாக ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ’சற்று முன் கிடைத்த தகவல்’ படத்தில் கதாநாயகனாகவும், பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருக்கிறார். புதுமுகம் ரூபிகா கதாநாயகி. பிரபு, நாசர், ரோகிணி, பொன்வண்ணன், ’கஞ்சா' கருப்பு, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை-திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.பி.மலர்வண்ணன். வசனம்: பி.என். பழனிவேல்ராஜா. இதில் ரஜினி என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com