ஆயிரம் விளக்கு
தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உன்னத உறவைச் சொல்ல வருகிறது ஆயிரம் விளக்கு. மகனாக சந்தனு நடிக்க, தந்தையாக வருகிறார் சத்யராஜ். சனாகான் சந்தனுவின் இணையாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன், சுஜா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கமல் என்ற புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார். மதுரையாகக் களமாகக் கொண்ட இப்படம், வழக்கமான மதுரைப் படமாக இருக்காது என்கிறார் இயக்குநர் ஹோசிமின். 55 வயதுள்ள ஒருவருக்கும் 25 வயது இளைஞனுக்குமான உறவுதான் கதை. இந்த உறவே தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும். மனதை நெகிழ வைக்கும் கதையை ஆக்ஷன் பின்னணியுடன் சொல்லியுள்ளேன் என்கிறார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு உள்ளத்தை உருக்கும் ஒரு பாடலை ஜேசுதாஸ் இதில் பாடியிருப்பது சிறப்புச் செய்தி.அரவிந்த்

© TamilOnline.com