சான் டியேகோ தமிழ் சங்கம் வருடாந்தரப் பூங்கா விருந்து
ஆகஸ்ட் 14, 2010 சனிக்கிழமையன்று சான் டியேகோ தமிழ்ச் சங்கம் வருடாந்தர கோடைக் காலப் பூங்கா விருந்தை San Dieguito County Park, 1628 Lomas Santa Fe Drive, Del Mar, CA 92014 என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது. பெரியோருக்கும் குழந்தைகளுக்கும் பலவித விளையாட்டுகள், வண்ணந்தீட்டல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுவையான உணவு பரிமாறப்படும். உறுப்பினரல்லாதாரும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள பிற தமிழர்களை அறியவும் அவர்களோடு பழகவும் இதுவோர் அரிய வாய்ப்பு. இந்த ஆண்டில் வரப்போகும் சங்கத்தின் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளையும் இங்கே அறிய முடியும்.

மேலும் தகவலுக்கு: www.sdts.org

© TamilOnline.com