கலாட்டா பையன்கள்


பல தெலுங்குப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பி. ரவி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் 'கலாட்டா பையன்கள்'. இதில் புதுமுகங்கள் உதய், பிரதிஸ்டா ஆகியோருடன் பொன்னம்பலம், காதல் தண்டபாணி, சுமன் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தங்களுடைய மகிழ்ச்சியே முக்கியம் என சுயநலத்துடன் வாழ்ந்து வரும் நான்கு இளைஞர்களின் வாழ்க்கையில், பொதுச்சேவை செய்து வரும் ஓர் இளம்பெண் குறுக்கிடுகிறாள். இதையடுத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நகைச்சுவை கலந்து கூறுகிறது ‘கலாட்டா பையன்கள்' என்கிறார் இயக்குனர் ரவி. இப்படத்தில் நட்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புதிய கோணத்தில் கூறியிருக்கிறார்களாம்.

அரவிந்த்

© TamilOnline.com