ஜெய் நடிக்கும் கனிமொழி


அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் புதிய படம் ‘கனிமொழி'. இதில் கதாநாயகன் ஜெய். சஷான் பதாம்ஸி என்ற புதுமுகம் கதாநாயகி. விஜய் வசந்த் முக்கிய வேடத்தில். வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஸ்ரீபதி ரங்கசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தில் யாருக்கும் கனிமொழி என்ற பெயர் கிடையாது. இருந்தாலும் கதைக்குத் தொடர்பான ஓர் அர்த்தம் அதில் பொதிந்திருக்கிறது என்று கூறும் இயக்குனர், படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இரண்டு வாரம் முறையான பயிற்சி கொடுத்த பிறகே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் பல புதிய முயற்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com