கோ


பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘கோ’. இதில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அஜ்மல், பியா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக முதன்முறையாக கேனான் 70 டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் முதல்சுற்றுப் படப்பிடிப்பை முடித்த கையோடு தற்போது பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஆனந்த். கதை, வசனம்: எழுத்தாளர்கள் சுபா.

அரவிந்த்

© TamilOnline.com