வசந்தபாலன் இயக்கும் அரவான்
‘வெயில்’, ‘அங்காடித்தெரு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஜி.வசந்தபாலன் இயக்கும் படம் ‘அரவான்’. இதில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். அவருக்கு ஜோடி தன்ஷிகா. முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிக்கிறார். பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார். தமிழ், தெலுங்கு என ஓரே நேரத்தில் இருமொழிகளிலும் உருவாக இருக்கும் இப்படம், பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வாழ்க்கையை, கலாசாரத்தை, வீரத்தை, காதலை முழுக்க முழுக்கப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்கிறது கோடம்பாக்கம் பட்சி.



அரவிந்த்

© TamilOnline.com