உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'
ஏப்ரல் 15, 2006 அன்று ·புட்ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித்விக் அரங்கத்தில் கலாட்டா-2006 நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டில் ஆதரவற்றோருக்குப் பணி செய்துவரும் 'உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த முழுநாள் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், உச்சக் கட்டமாக மாலையில் வளைகுடாவின் பிரபல 'பல்லவி' குழுவினரின் மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெறும். 'பல்லவி'யின் பத்தாண்டுச் சேவை யைக் கொண்டாடும் விதமாகவும் இந் நிகழ்ச்சி அமைவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு முக்கிய நிகழ்ச்சி Galaata Idol! இதில் 15 வயதான எவரும் பங்கேற்றுத் தம் பாட்டுத் திறனைக் காட்டலாம். நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் இரண்டு போட்டியாளர்கள் பல்லவி குழுவினருடன் சேர்ந்து பாடும் வாய்ப்புப் பெறுவார்கள். இத்துடன் Matinee Madness நிகழ்ச்சியில் கோலிவுட் க்விஸ், பாட்டுக்குப் பாட்டு போன்ற போட்டிகள் இடம்பெறும். மற்றும் கலாட்டாவுக்கே உரித்தான Pettai Walk என்னும் உடைய லங்கார மற்றும் மேடை நடன நிகழ்ச்சியும் நடைபெறும்.

உதவும் கரங்களின் சேவையைப் பற்றிச் சிறு குறிப்பு:

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஏழ்மை, எயிட்ஸ், மனநோய் போன்ற பல காரணங்களால் பல்லாயிரக் கணக்கானோர் அவதிப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் வயதானோரும் அனாதைகளாகத் தவிக்கிறார்கள். 'உதவும் கரங்கள்' அத்தகையவர்களுக்கு வசிப்பிடமும் உணவும் அளித்து உதவி வருகிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வீடு இழந்தோருக்கு மீண்டும் கட்டிக் கொடுக்கும் பணி 2006-ல் நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1983-ம் ஆண்டு உதவும் கரங்கள் இயக்கத்தை நிறுவிய வித்யாசாகர், தானே ஓர் அனாதையாக இருக்கையில் பராமரிக்கப்பட்டதால் சமூகத்துக்கு நன்றி கூறும் வகையில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கையின் முழு ஆர்வமும் இந்த இயக்கம்தான்.

உதவும் கரங்களின் சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடா வட்டம் 2003-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உதவும் கரங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்க்கவும், நிதி திரட்டவும் அதன் 150-க்கும் மேலான தொண்டர்கள் உற்சாகத்துடன் பாடுபட்டு வருகின்றனர்.

இதற்கு நீங்களும் உதவலாம். நன்கொடை அளிக்கவும் தொண்டராக இணையவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் விரும்பினால் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைத்தளங்கள்:
http://www.ukdavumkarangal-sfba.org
< a href="http://www.galaata.org" target="_blank">http://www.galaata.org

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com