ஜூலை 2010: குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற மாதம் இருபத்தைந்து பேர் சரியான விடை கண்டுபிடித்ததற்குப் பாராட்டுகள். இப்பொழுது இதமாக வருடி விடும் புதிருக்கு பதிலாக பாய் விரித்துத் தூங்குபவர்களையும் எழச் செய்யும் கடுமையான புதிரைத் தரக் கண்டிப்பாக முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது நீங்கள் அனுப்பப் போகும் விடைகளிலிருந்து தெரியும்.
தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

குறுக்காக
3. மரி நெஞ்சுக்கு இறுதியில் படபடக்கும் (3)
5. கம்பி போட்ட வீதி? (5)
6. பித்தன் இருக்குமிடம் (2)
7. மாங்கனி இடையிரண்டும் இல்லாததால் துளி ருசி சேர்த்த வகை! (3)
8. தலையணை அணிக்கும் புத்தியில் ஏறும் (5)
11. இருப்பதுக் கல்லில் என்றால், பெருலாபத்திற்குப் பின்னாளில் விற்பதற்கு உத்தி (5)
12. யானை சூழ வந்த முதல்வருக்குச் சாமரம் (3)
14. கீழானவனே, நீங்காச் சாபங்கள் ஆரம்பிக்கட்டும் (2)
16. வருந்திக் கற்றவன் மாட்டியதால் போக்கிடமில்லா நிலை (5)
17. ஆசிரியர் இறுதியாகக் கல்லணை வந்து நொறுக்கிய அரிசி (3)

நெடுக்காக
1. தனது பெரிய தலையின்றி வ.உ.சி. குழம்பியது பொருத்தமானது (6)
2. உண்மை செங்கல் வெளித்தெரியாமல் செய்வது (3)
3. பந்தியில் முதலில் போட வேண்டியது மரணம் ஆபாசமில்லாதிருக்கத் தேவையானது (2,3)
4. இங்கே காட்டு விலங்கிருக்குமா? இல்லை மலை விலங்கிருக்குமா? (2)
9. குளிக்கத் தொடங்க நீர் சுண்ட துறை தடுமாற முழுமையானது (6)
10. கத்தியைச் செருகிக் கொண்டு தழுவச் சொல்லும் இலக்கியக் கூறு (5)
13. கோட்டைக்குப் பாதுகாப்பு அளிப்பவரை முதலில் நீக்கு (3)
15. ஓட்டைச் சாக்கு கொண்டு மரி (2)

வாஞ்சிநாதன்

ஜூன் 2010 விடைகள்

© TamilOnline.com