மாதுளம்பழ சாதம்
தேவையான பொருட்கள்
மாதுளை முத்துக்கள் - 1 /2 கிண்ணம்
வடித்த சாதம் -2 கிண்ணம்
பன்னீர் துண்டுகள் -1 /2 கிண்ணம்
இஞ்சித் துருவல் -1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு -1 /2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
வெந்தயப் பொடி -1 சிட்டிகை
பெருங்காயப் பொடி -1 சிட்டிகை
சமையல் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு -1 தேக்கரண்டி


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி, மஞ்சள்தூள் போடவும். கடுகு வெடித்தபிறகு இஞ்சித் துருவல், பன்னீர் துண்டுகள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.பன்னீர் துண்டுகள் பொன்னிறமானவுடன் இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சாதத்துடன் நன்றாகக் கிளறிக் கலக்கவும். பின்பு இதனில் உதிர்த்த மாதுளை முத்துக்கள் சேர்த்துக் கலக்கவும். மாதுளை பழ முத்துக்கள் நசுங்காமல் மிதமான தீயில் வைத்துக் கிளறவும். கறிவேப்பிலையுடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கலக்கவும். மாதுளை பழ ரைஸ் தயார். இந்தப் புதுவகையான உணவு ருசியானது, சத்துள்ளது. சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பிரேமா நாராயணன்,
ஷாம்பர்க், இல்லினாய்ஸ்

© TamilOnline.com