கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்
மே 8, 2010 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் வின்சர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சற்றேறத்தாழ 600பேர் கலந்து கொண்டனர். மாலை 3:00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சங்கத் தலைவர் இரமேஷ் நாச்சியப்பன் வரவேற்றார். பின் கனெக்டிகட் தமிழ்ப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நாடகம், பாடல்கள், பரதநாட்டியம், திரையிசை நடனம், ஆண்களின் குழு நடனம், பெண்களின் நாட்டுப்புற நடனம், திரையிசை நடனம், ஜோடி நடனம், இன்னிசை என 26 கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக யேல் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருந்த முனைவர் பென்னி மற்றும் திரு பிளேக் அவர்களின் “தமிழ்மொழி கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்” பற்றிய உரை அமைந்தது. கனெக்டிகட் மாகாண கவர்னர் ஜீடி ரீல் அவர்கள் மே 8ம் தேதியை 'தமிழ்ப் புத்தாண்டு தினமாக” அறிவித்து பிரகடனம் அனுப்பியிருந்தார். அதனை இரமேஷ் நாச்சியப்பன் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

செயலாளர் திரு. நடராஜன் குப்புராஜின் நன்றியுரைக்குப் பின் இரவு 8:00 மணிக்கு இரவுணவுடன் விழா நிறைவடைந்தது.

உமா சேகர்,
கனெக்டிகட்

© TamilOnline.com