மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
2010 மே 28ம் தேதி முதல், ஜூலை இறுதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழ்பவர் அம்மா. தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை இடம்பெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சியாடல்05.28 - 05.31
சான் ஃபிரான்சிஸ்கோ-வளைகுடாப் பகுதி06.03 - 06.12
லாஸ் ஏஞ்சலஸ்06.14 - 06.18
ஆல்பகர்க்கி 06.20 - 06.24
டாலஸ்06.27 - 06.28
சிகாகோ06.30 - 07.02
நியூயார்க்07.04 - 07.06
வாஷிங்டன் டி.சி.07.09 - 07.11
பாஸ்டன்07.13 - 07.16
டொரன்டோ , கனடா07.19 - 07.22


மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநல தொண்டுகளைப் பற்றி அறிய: amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com