பாண்டிராஜின் 'வம்சம்'


கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் படம் வம்சம். இதை 'பசங்க' எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்த பாண்டிராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். நாயகியாக சுனேனா நடிக்கிறார். உடன் கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் உதவியாளர் தாஜ் நூர் இசையமைக்கிறார்.​ மு.க.தமிழரசு தயாரிக்கிறார். புதுக்கோட்டைப் பகுதியில் வேகமாக வளர்ந்து வருகிறது இத்திரைப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com