கால பைரவி
விஜய் நடித்த 'சந்திரலேகா' உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் நம்பிராஜன். இவர் தற்போது தனது பெயரை எம்.ஜி.ஆர். நம்பி என்று மாற்றிக் கொண்டதுடன், எம்.ஜி.ஆர். ஸ்டூடியோ' என்ற தனது திரைப்பட நிறுவனத்தின் மூலம் தயாரித்துவரும் படம் கால பைரவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் ஜான்சன், எலிசியா ஆகியோர் நடிக்கின்றனர். அந்தந்த மொழிகளின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் தமிழ்ப்பதிப்பில், பரத் ரெட்டி, ரமேஷ்கண்ணா, கஞ்சா கருப்பு, அலெக்ஸ், அனுராதா ஆகியோர் நடிக்கின்றனர். எம்.ஜி.ஆர். நம்பியே இசை அமைக்கிறார் என்பது சிறப்புத் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com