பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 16, 2010 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவில் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம் (www.batamilsangam.org) பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது. பொங்கல் விழா காஷ்மீர் முதல் குமரி வரை ஒருங்கிணைக்கும் பாரத கலாசார அடையாளத் திருவிழா என்பதைக் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

செல்வி கீர்த்தனா ஸ்ரீகாந்த்தின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் தொடர்ந்து சிவசுந்தரி ராஜராஜன், தீபா மகாதேவன், கீதா சேஷாத்ரி, அகிலா ஐயர், நித்யவதி ஆகியோர் நடனம், வயலின், சேர்ந்திசைப் பாடல் எனக் குழு நிகழ்ச்சிகளை வழங்கினர். நிகிலேஷ் பாஸ்கர் பாடல், பவித்ரா நடராஜன், ஷ்ருதி அரவிந்தன் ஆகியோரின் தனி நடனங்கள், கல்பகம் கவுசிக் அவர்களின் மாணவர்களது இசை நிகழ்ச்சிகள், ஸ்ரீவத்சன், சித்தார்த் பாடல்கள், தமிழ்வாணன் பொன்னுசாமி குழுவின் நிகழ்ச்சி, அஜிதாவின் பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறின. ஹரிப்ரியா சுந்தரேஷ், சூர்யா சுந்தரேஷ் இருவரும் அழகிய தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

சங்கத்தின் 2010-11ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக் குழுவிற்கு ராகவேந்திரன் நாகராஜன் (தலைவர்), திருமுடி துளசிராம் (செயலாளர்), வாசுதேவன் நஞ்சன்கூட் (பொருளாளர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

மே 1, 2010 சனிக்கிழமை அன்று சன்னிவேல் இந்துக் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

ராகவேந்திரன் 785 979 5497
வாசுதேவன் 650 868 0510

மின்னஞ்சல்: bharatitamilsangam@yahoo.com

ச.திருமலைராஜன்

© TamilOnline.com