தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் 'சங்கீதமேகம்'
ஏப்ரல் 10, 2010 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குத் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்' என்னும் மெல்லிசை நிகழ்ச்சியை வழங்க இருக்கின்றனர். 80களில் வெளியான இசைஞானி இளையராஜாவின் படங்களிலிருந்து பாடல்கள் இசைக்கப்பட இருக்கின்றன. பல்வேறு பாடகர்கள், பாடகிகள், இசை விற்பன்னர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பிப்ரவரி 13, 2010 அன்று வட கலிபோர்னியா பகுதியில் கேம்பெல் ஹெரிடெஜ் தியேட்டரில் இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்' நிகழ்ச்சி அரங்கம் நிறைந்த காட்சியாக நடந்தேறியது.

இந்நிகழ்ச்சி மூலம் பெறப்படும் தொகை, சென்னையில் இருக்கும் 'உதவும் கரங்கள்' சேவை அமைப்புக்கு வழங்கப்படும்.

நாள்: ஏப்ரல் 10, 2010; சனிக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: Hoover Middle School Auditorium, 3501 Country Club Drive, Lakewood, CA 90712
கட்டணம் : $25, $12, (12 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம்)
சீட்டுக்களைப் பெற: www.sulekha.com
மேலும் அறிய: 562-653-6120 - socialtamilcharity@yahoo.com

அனு ஸ்ரீராம்,
தென்கலிஃபோர்னியா.

© TamilOnline.com