புலி வேஷம்


அப்பாவி இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதிரடி வீரனாக மாறுவதைக் கூறும் படம் 'புலி வேஷம்'. இப்படத்தில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கிறார். உடன் சதா, திவ்யா விஸ்வநாத் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தை இயக்குகிறார் பி. வாசு. நகரத்துக்கு வரும் ஒரு வெகுளி இளைஞனை, நகர வாழ்க்கை எப்படிப் புரட்டிப் போடுகிறது, அவன் எப்படிப் போராடுகிறான், அதன் விளைவு என்ன என்பதுதான் படத்தின் கதை. ஆர்.கே.வின் நடிப்புத் திறமையைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது கோடம்பாக்கம் குருவி. இசை: ஸ்ரீகாந்த் தேவா.

அரவிந்த்

© TamilOnline.com