உத்தம புத்திரன்
பழைய படங்களின் பாடல்களை ரீமேக் செய்வது மட்டுமல்லாது பழைய வெற்றிப்படங்களின் தலைப்பைப் புதிய படங்களுக்குச் சூட்டுவதும் தொடர்கிறது. 'யாரடி நீ மோகினி', 'குட்டி' போன்ற வெற்றிப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது நடிக்க இருக்கும் படம் 'உத்தம புத்திரன்'. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ரெடி', தமிழில் உத்தம புத்திரனாகிறது. கதாநாயகி ஜெனிலியா. மித்ரன் ஜே. ஜவஹர் இயக்குகிறார். நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படமான இதில் பாக்யராஜ், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி உட்படப் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.



அரவிந்த்

© TamilOnline.com