குருவிக்கூடு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு, மிளகாய் விழுது - 2 மேசைக் கரண்டி

மேல்மாவு:
கடலை மாவு - 2 கிண்ணம்
சோள மாவு - 1/2 கிண்ணம்
நொறுக்கிய ப்ளெயின் நூடுல்ஸ் - 1 கிண்ணம்
உப்பு - சிறிதளவு
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
உருளைக் கிழங்கை வேகவிட்டு மசித்து மற்றவற்றைக் கலந்து ஓவல் வடிவில் உருட்டி வைக்கவும். மேல்மாவுக்குக் கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு போல் கலந்து கொள்ளவும். உருளைக் கிழங்கு உருண்டைகளை இதில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். நூடுல்ஸ் மேலே ஒட்டிக்கொண்டு குருவிக் கூடு போலத் தோற்றமளிக்கும். செய்வதும் எளிது. தின்ன அதைவிட எளிது!

ஜயலக்ஷ்மி கணேசன்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com