ஏப்ரல் 2006: குறுக்கெழுத்துபுதிர்
குறுக்காக

3. சமய சடங்கு நிறைவுற நீர்ப் பாசனத்தைக் கட்டுப்படுத்தும் (3)
5. முந்தியவன் தொழில் தொடங்கப் பணம் முன் பின் வழங்கியவன் (5)
6. துன்பத்தைத் தரும் விளையாட்டு முடிவு (2)
7. பல் உடைய கத்தி முனை கேள்வியை இல்லையென்றாக்கும் (3)
8. உயிருடன் இருக்கும்போது முடிதுறக்க விரும்பாதது (5)
11. விசித்ரவீரியனை மணந்தவள் (5)
12. மையிட்டு வெளியேறு உள்ளே ஏதுமின்றி சூன்யம் (3)
14. குளியலறையில் பச்சையாய்ப் பார்க்கலாம்! (2)
16. இருள் பரவ வயதான கம்பர் தந்த உணவாக இருக்கலாம் (5)
17. இறக்குமதி வரி குறைந்தால் இன்பம்தான் (3)

நெடுக்காக

1. கடலினும் பெரிதான முக்கியமான தலைவர் வரலாற்றில் இரண்டாமிடத்தைப் பிடுங்கிக் கொண்டார் (6)
2. ஆணுமில்லை, பெண்ணுமில்லை இடைச் செருகிய வேல் முனையால் ராஜ்யம் நடத்தும் பெண் (3)
3. உள்ளே வழிய ஆரம்பித்தாலும் அரசன் அரசன்தான்! (5)
4. பாக்கு விற்பவனிடம் மறைந்து ஓரிடத்தில் திரட்டு (2)
9. கட்டிய புடவையுடன் வந்தவளிடம் இல்லாதது (6)
10. கல்கி வரும் காலம் (2, 3)
13. புண்ணுடல் (3)
15. கிருஷ்ணனின் அத்தை மகன் பாலன் இல்லையென்றாலும் குழந்தைதான் (2)

vanchinathan@gmail.com

மார்ச் 2006 விடைகள்

குறுக்காக: 1. பந்திக்கு, 4. முந்தி, 6. சுருதி, 7. பக்குவம், 8. நம்புக, 9. நாநயம், 12. வானவியல், 14. வெந்த, 16. குரல், 17. வியாபாரம்
நெடுக்காக: 1. பரிசு, 2. தித்திப்பு, 3. கும்பல், 4. முழுகு, 5. திரும்பும், 8. நனவாக்கு, 10. நளவெண்பா, 13. விரால், 15. தடம்

© TamilOnline.com