படித்துறை
நடிகர் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' தயா‌ரிப்பு நிறுவனம் முதன்முதலாகத் தயாரிக்கும் படம் 'படித்துறை'. பாலுமகேந்திராவின் சீடரும், பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகனுமான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் இதை இயக்குகிறார். கதாநாயகன் அபிஷேக், நாயகி சாந்தினி. இயக்குனர் அழகம் பெருமாள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதன்முறையாகப் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். இவர்களுடன் முத்துலிங்கம், பழனிபாரதி, முத்துக்குமார் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இசை: இளையராஜா. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக், பவதாரணி ஆகியோர் பாடியுள்ளனர். நெல்லை மக்களின் மொழியையும், கலாசாரத்தையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com