மார்ச் 2010: ஜோக்ஸ்
"உங்க பையன் பெரிய டாக்டரா வருவான் பாருங்க"
"எப்படி சொல்றீங்க?"
"ஆங்கில மாதங்களின் பெயரைக் கேட்டா, ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரிங்கிறானே!"

அதிரை யூசுப்,
சன்னிவேல், கலி.

*****


"என் மனைவிக்கு நான் அவளோட கூந்தல் மாதிரி..."
"அப்பிடி ஒங்களை கவனிச்சுக்கறாங்களாக்கும்!"
"நீங்க வேற, தினமும் பின்னி எடுக்கறாங்க...."

அதிரை யூசுப்,
சன்னிவேல், கலி.

*****


"என்னங்க, 'அன்னை இல்லம்'னு ஒரு பேப்பர்ல எழுதித் தந்து கடன் கேக்கிறீங்களே, ஒண்ணும் புரியலையே"
"உங்க விளம்பரத்தில 'வீட்டின் பேரில்' கடன் தரப்படும்'னு எழுதியிருந்துச்சே, அதான்...."

அதிரை யூசுப்,
சன்னிவேல், கலி.

© TamilOnline.com