தெரியுமா?: பத்ம விருதுகள்
பல்வேறு துறைகளில், சாதனை படைத்தவர் களுக்கு வருடந்தோறும் பத்ம விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் வேணுகோபால் ரெட்டி, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன், இப்ராகிம் அல்காசி, ஜோரா சீகல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பத்மபூஷண் விருதுகள் கலைத்துறையில் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அமீர்கான், உஸ்தாத் சுல்தான் கான், மல்லிகா சாராபாய், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாகச் செயல்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் விஞ்ஞானி ஆரோக்கியசாமி ஜோசப் பால்ராஜ் உட்பட 43 பேருக்கு வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுகள் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நரேன் கார்த்திகேயன், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்தி கேயன், கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், டி.வி.எஸ். வேணுசீனிவாசன், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ரசூல் பூக்குட்டி, நடிகை ரேகா உள்ளிட்ட 81 பேருக்கு வழங்கப்படுகிறது.

இந்திக் கவிஞர் ஆசார்ய ஜானகி வல்லப சாஸ்திரி தன்னைவிட இளநிலைக் கவிஞர் பலருக்கு முன்னரே தரப்பட்டுள்ளது என்ற காரணத்தைக் காட்டி பத்மஸ்ரீயை மறுதலித்துள்ளார்.

சாதனையாளர்களுக்கு தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com