வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice)
தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை (பொடியாக நறுக்கியது)- 3/4 கிண்ணம்
நெய் - 1 மேசைக்கரண்டி
பன்னீர் (சிறிய
துண்டங்கள்) - 15
வெந்த பாசுமதி
சாதம் - 2 கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய்
(நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள்
(all spice) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக
நறுக்கியது) - 1 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக
நறுக்கியது) - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

நெய்யில் பன்னீர்த் துண்டங்களைப் பொரித்து எடுத்து வைக்கவும். பின்னர்க் கீரையைப் போட்டுப் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே நெய்யில் வெங்காயத்தை வதக்கி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும். வெந்த பின்னர் உப்பு, மசாலாப் பொடி தூவிக் கிளறி இறக்கவும்.
இவை அனைத்தையும் வெந்த சாதத்துடன் போட்டுக் கிளறி நுண்ணலை அவியனில் வைக்கும் ஒரு பாத்திரத்தில் போடவும்.
இதை அலுமினியத் தாளால் (aluminum foil) மூடி 350 டிகிரி ·பாரன்ஹீட்டில் 5 நிமிடம் அவிக்கவும்.
சுடச்சுட மேதி பன்னீர் சாதம் தயார்!

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com