தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்
சான் ஹோசே அருகே ஒரு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி திருக்கோவிலை நிர்மாணிக்கும் நோக்கத்துடன் தெற்கு விரிகுடா ஹிந்து மையம் (South Bay Hindu Center-SBHC)) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தென்விரிகுடாப் பகுதியிலுள்ள நடன, இசைப் பள்ளிகள் பயனுறும் வகையில் 700 இருக்கைகள் கொண்ட அரங்கம் ஒன்றும் நிர்மாணிக்கப்படும். மகளிர் மற்றும் இளையோர் பங்கேற்பை இந்த அமைப்பு முன்னிறுத்திச் செயல்படும்.

இந்த ஆண்டில் நிலம் வாங்குவதோடு தொடங்கி, 2014ல் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குச் சற்றேறக்குறைய 9 மில்லியன் டாலர் செலவாகும் என்பது கணிப்பு. ஆஷா ரமேஷ் அவர்களின் 'ராகமாலிகா' மற்றும் பிற விரிகுடாப் பகுதிக் கலைஞர்களின் ஒத்துழைப்போடு நிதி திரட்ட விழைகின்றனர் இவர்கள்.

இம்முயற்சிகளில் SBHCயுடன் ஒத்துழைக்க விரும்பும் அமைப்புகளும் தொண்டர்களும் தொடர்பு கொள்ள: எஸ். விஸ்வேஸ்வரன் - 408.997.2185 - svishu@gmail.com.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com