தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது
2009ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளரான புவியரசுக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதியுள்ள 'கையொப்பம்' என்ற கவிதை நூலுக்கு இது வழங்கப்படுகிறது. புவியரசு, நஜ்ருல் இஸ்லாம் எழுதிய கவிதையை மொழிபெயர்த்ததற்காக முன்னர் அந்தப் பிரிவில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கோவையைச் சேர்ந்த புவியரசு, தமிழாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். இவரது மனிதன் என்ற நாடகம் 19 மொழிகளில் மொழிகளில் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பாகியுள்ளது. 79 வயதான இவர் தஸ்தாவஸ்கியின் 1200 பக்க நாவலான கரமசோவ் சகோதரர்களைத் தமிழில் தந்துள்ளார்.



© TamilOnline.com