ஜனவரி 2010 குறுக்கெழுத்துப் புதிர்
தென்றல் வாசகளுக்கு 2010 ஆண்டு இனிதாகச் செல்ல வாழ்த்துகள். டிசம்பர் புதிருக்கு முப்பத்தைந்து வாசகர்கள் சரியான விடையைக் கண்டு அனுப்பி எனக்கு நல்ல புத்தாண்டுப் பரிசைத் தந்துவிட்டீர்கள். இம்மாதப் புதிரில் கொஞ்சமாவது கஷ்டப்பட்ட மாதிரி காட்டச் சற்றே தாமதமாக விடையை அனுப்பி என்னைக் கொஞ்சம் தேற்றுங்கள்!

குறுக்காக
5. உயர்ந்த காவல் கொண்ட இடம் பாரதத்தைக் கீறியவன் இருப்பான் (6)
6. தெய்வத்தைப் புலவர்கள் பாவையர் செவ்விதழ் என்பர் (2)
7. பெண்ணைத் துறந்த கனி கபிலரின் ராகம் (4)
9. கடைசியாகச் சொன்ன வம்பு பரப்பும் உலகம் (4)
10. சாமர்த்தியமாகத் தலை நுழைத்த விதம் வெறும் நடிப்பு (4)
12. அழை அதன் பிறகு கொஞ்சம் போனாலும் சிலம்பு ஓரம் (4)
13. பாதி உண்பது முதன்மையானதல்ல (2)
14. பின்னல் தலை நீங்கி மிஞ்ச தொலைவிலிருப்போரையும் தொடர்புகொள்ள உதவும் (6)

நெடுக்காக
1. தழைத்தோங்கி வளர்வதைக் கார்பன் டை ஆக்ஸைடு கக்குவான் எனலாம் (2)
2. மூன்று ஸ்வரங்களுடன் அறிவு கெட்ட கோமதி என்னுடன் பிறந்தாள் (4)
3. கடைகளில் வியாபாரத்தை நிறுத்தி மார்பில் உயிரை எடுக்கும் (4)
4. நிராயுதபாணியாக கோவில் வந்த தன் மனம் மயங்க மிகவும் சிறப்பானது (6)
8. கோடீஸ்வரனில் நூறில் ஒருவன் (6)
11. கூடியிருந்த முது பலா வெடித்துச் சிதற பயமிலாது முழுகு (4)
12. ஆவி பிரிந்த கிராமத்து மக்கள் துக்கம் (4)
15. வெள்ளிபோல் உயர்வாகக் கருதப்படாவிட்டாலும் அடுத்தது இதுதான் (2)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

டிசம்பர் 2009 புதிர் விடைகள்

© TamilOnline.com