பொடி சமாச்சாரம்!
சுண்டைக்காய்ப் பொடி

தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வற்றல் - 1 கிண்ணம்
சீரகம் - 1 கிண்ணம்
துவரம்பருப்பு - 1 கிண்ணம்
மல்லிவிதை - 1 கிண்ணம்
மிளகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - நிறையச் சேர்க்கலாம்
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத் தூள் - சிறிதளவு


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



செய்முறை
வாணலியில் எல்லாவறையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பெருங்காயப் பவுடர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அவற்றை காற்றுப் புகாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு வறுக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி பொடியைச் சூடான சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட வேண்டும். உடம்பு அசதி, கை, கால் வலி, பித்தம், வாயுத் தொல்லை அனைத்தும் நீங்கும். பிரசவம் ஆனவர்களுக்குச் சிறந்த பொடி.

சாந்தா சாயிதாஸன்,
நியூ பிரன்ஸ்விக், நியூஜெர்ஸி

© TamilOnline.com