இசையுதிர்காலம்: பளார்!
பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூடியிருந்த மகாசபை அது. குரு பாட, சிஷ்யர் அதற்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். குருவுக்குப் பாட மட்டுமல்ல; வயலின் வாசிக்கவும் நன்கு தெரியும். கச்சேரி சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று சில அபஸ்வரங்கள் வயலினிலிருந்து வெளிப்பட்டு விட்டது. உடனே குருவுக்கு மகா கோபம் வந்து விட்டது. பாடுவதை அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து கொண்டவர், எல்லோர் முன்பாகவும் சிஷ்யரை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தார். சிஷ்யருக்குப் பொறிகலங்கிப் போய்விட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குருவிடமும், சபையினரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, புன்னகையுடன் கச்சேரியைத் தொடர்ந்தார். கச்சேரியும் நடந்து முடிந்தது.

கச்சேரி முடிந்தவுடன் சீடர் அருகில் சென்ற குரு, கன்னத்தைப் பிடித்து ஆதரவாகத் தடவியவாறே, 'அடி பலமாக பட்டுவிட்டதா?' என்றார் குரல் தழுதழுக்க.

'அதெல்லாம் ஒன்றுமில்லை, என்றார் சீடர் சற்றே குழறலுடன்.

"இசை என்பது ஒரு தவம். அவ்வேள்வியில் 'நான்' என்ற எண்ணத்தை ஒழித்து, நம்மை மறந்த நிலையில் எல்லாம் ஒன்றாகக் கலக்கும்போதுதான், இசையின் உண்மையான அழகு வெளிப்படுகிறது. அது பிசகியதால் தான் அறைந்தேன். உனது நன்மைக்காகத்தான் அவ்வாறு கடினமாக நடந்து கொண்டேன்" என்று சொல்லிச் சீடரைத் தேற்றினார் குருநாதர்.

இசைஞானத்தோடு அன்பையும், பாச, நேசத்தையும் பரிமாறிக் கொண்ட அந்த குரு-சிஷ்யர்கள் யார் தெரியுமா?

விடை

© TamilOnline.com