டிசம்பர் 2009 குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற ஆண்டு டிசம்பரில் இசை தொடர்பான குறிப்புகள் சில அமைக்கப்பட்டிருந்தன. சரிகமபதநி என்றால் என்னவென்று தெரியாமல் ஓரளவுதான் கதையடிக்கமுடியும். அதனால் இம்முறை முயலவில்லை. ஆனாலும் சென்னையில் வீசும் புயல் மழையின் தாக்கம் இருக்கிறது. அதனால் சங்கீத சீசனுக்கு பதிலாகப் புயல், வெள்ளம் சீசன் பற்றி நான்கு குறிப்புகள் இருக்கின்றன. புதிர்க்காட்டில் மழை பெய்கிறது. இணையத்தில் பலரும் வெளியிடும் புதிர்களை முயன்று நீங்களும் புதிர் அமைக்க முயலுங்கள்.

குறுக்காக
3. நுழைத்த புயல் முழுமையில்லாவிட்டாலும் உள்ளே வந்து தாக்கி விட்டது (5)
6. ஒரு மண்டலத்தின் மத்தி இல்லாமல் தடுமாறிய நகரம் (4)
7. படுத்த படுக்கையாயிருப்பவருக்கு பூஜை செய்பவர் (4)
8. காம ரம்பா தர்மனுக்கு முதல்வனுடன் ஆட்டம்போட்டதெல்லம் பழம்பெருங்கதை (6)
13. பருகிய பானம் இலக்கியமில்லாமல் இல்வாழ்க்கை (6)
14. முள்ளிலைத் தாவரத்திற்குப் படித்தா ஏழை இறுதியாக வந்தான்? (4)
15. காற்று, வெள்ளம் நடுவே பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பர் (4)
16. உலக்கையால் உழைத்து தாமரை நுனியால் அரசனுக்கு அறிவுரை கூறு (5)

நெடுக்காக
1. ஒரு அவதாரம்? இல்லை, ஏகப்பட்ட அவதாரம்? (5)
2. ஒரு கல் கீழ் தரை ஓரம் ஒரு நெம்புகோல் (5)
4. வெள்ளத்திற்கும் பம்பாநதிக்கும் இடையே அப்படி ஒரு ராசி (4)
5. புண்படும்படி பேச வம்பை மையமிட்டுச் செயல்முறை ஏற்பாடு (4)
9. மெதுவாக அடித்து மறைப்பு (3)
10. மரணத்தையும் பெறுவதற்குக் கலங்கியவர் தலை சாயும் (5)
11. கடைசியாகப் பணம் பாதாளம் சேர தட்டு (5)
12. தடை சிக்க வெளியேறிப் போராடிக் கடிக்காத சிற்றாடை வானில் அலைபாயும் (4)
13. இளகிய குரல் கொண்டு உட்கார், உள்ளே தெய்வத்தை நிராகரித்த கோழை (4)


நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

நவம்பர் 2009 விடைகள்

© TamilOnline.com